தஞ்சை! உலகமே வியக்கும் ஒரு கட்டிட திறன்.எந்த வித நிலைக்கால பயன்பாடு இயந்திரங்களும் அல்லாது கட்டப்பட்ட பிரம்மாண்டம் அன்று என் கண் முன்னே விரிந்து நின்றது. அழகிய கோவில். நான் கண்ட மற்ற கோவிலை காட்டிலும் இங்கு கூட்டம் நிறை. வண்டியை நிறுத்திவிட்டு ஒவ்வொரு வாயிலாக கடக்கும்போதே ரோமங்கள் சிலிர்த்துக்கொண்டு நின்றது எனக்கு. அத்தனை குடும்பங்கள். அத்தனை சந்தோசங்கள். அத்தனை கூட்டத்திலும் நிம்மதியாக சுவாசிக்கவும், சிரிக்கவும் முடியும் உங்களால். இது பல கோவில்களில் கிடைப்பது இல்லை. நான் கடந்து செல்லும் ஒவ்வொரு மனிதனும் அந்த வானுயர் கோபுரத்தை உயர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். நான் கடந்து சென்றேன். அந்த புல் தரையில் சென்று அமர்ந்தேன். திருப்புறம்பிய போரில் விஜயாலயனும் ஆதித்தனும் பிற்கால சோழருக்கு அடித்தளம் அமைத்ததை பார்த்தோம். ஆதித்தனுக்கு பிறகு அவன் மகன் பராந்தகன் இன்னும் சோழத்தை சிறப்புறச்செய்ய அதன் பின் அவன் மகன் கண்டராதித்தன் ஆட்சி பொறுப்பேற்கிறான். மற்றவர்களை போல அல்லாது இவன் சிவப்பணியில் அதிக நாட்டம் கொண்டமையால் சில ஆண்டுகளே ஆட்சி புரிந்து பிறகு தன் தம்பியாகிய அரிஞ்சயனிடம் ஆட்சியை கொடு...