சோழ ரைட் முடித்த சில நாட்களிலே தொண்டை மண்டல பகுதிகளை சுற்றி வர ஆசை வந்தது எனக்கு. அதனால் சில நாட்களாகவே பயண திட்டமிடல் செய்துக்கொண்டிருந்த நான் ஒருவழியாக திட்டத்தை வரையறுத்தேன். பல தேடல்களுக்கு பிறகும், பல சூழ்நிலை ஆராய்வுகளுக்கு பிறகும் கையில் குறிப்புடன் கிளம்ப தயாரா நிற்கையில்- சென்ற முறை சோழர் ரைடுக்கே அழைக்காமல் சென்றதை கோபத்தோடு கடிந்துக்கொண்ட பிரவீனை இம்முறை அழைத்துக்கொள்வது என முடிவெடுத்து பேசினேன். சொன்னது தான் தாமதம் உடனே சம்மதித்து விட்டான். காலை ஆறு மணிக்கு புறப்படுவதாக திட்டம். பிரவினின் தூரத்தை கணக்கில் கொண்டு காலை ஏழாக மாற்றியமைக்கப்பட்டது. சரியாக 7.15க்கு அவன் தாம்பரம் வந்துவிட இருவரும் கிளம்பினோம் அந்த GST சாலையில். காயார் - ஆடலீஸ்வரர் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் ஒரு வலது திரும்ப வேண்டும். திடீரென என் ஃபோனில் அன்று நெட் வேலை செய்யவில்லை. புண்ணியம் – பிரவின் என்னோடு இருந்தான். அவனுக்கு முன்னரே மேப்பின் குறிப்பை அனுப்பி வைத்திருந்தேன். அவன் பின்னால் உட்கார்ந்து வழிக்காட்ட, ஒரு வலதின் திருப்பத்தின் பிறகு நாங்கள் சிட்டி வாழ்க்கையை தூரம் தள்ளிவிட்டு காட்...