வேகமாக சென்ற என் வண்டி நின்ற இடம் தாராசுரம்…! சோழர்களின் கலை பொக்கிஷங்களாக கருதப்படுவது மூன்று கோவில்கள். 1. தஞ்சை பெரிய கோவில் 2. கங்கை கொண்ட சோழபுரம் மூன்றாவது தாராசுரம் – ஐராவதீஸ்வரர் கோவில். சோழர்களின் அழியாத பெருங்கோவில்கள் என இதை சொல்வதுண்டு. கட்டிய காலம் பார்க்கையில் தாராசுரம் கோவில் தான் சமீபத்திய கோவில். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் இராசராசனால் கட்டப்பட்ட ஒரு கலை களஞ்சியம். நீங்கள் சிற்பத்தின் அழகை ரசிக்க வேண்டுமா இங்கு தான் உங்களது முதல் அடி இருக்க வேண்டும். வெறும் ஒற்றை அங்குளத்தில் அவ்வளவு அழகான சிற்பங்கள், கதைகள் என ஒரு நாள் கண்டிப்பாக போதாது இந்த கோவிலின் அழகை ரசிக்க. முன்னமே சென்றிருந்தமையால் நான் விரும்பும் இடங்களை மட்டும் சென்று பார்த்துக்கொண்டேன். சோழரின் நேரடி வழி ஆளுமை கங்கை கொண்ட சோழபுரத்தை தலைமை இடமாக கொண்டு ஆண்ட, கங்கை வரை வென்று இக்கால இந்தோனேஷியாவையும் வென்று உலகிற்கே தமிழனின் பெருமையை நிலைநாட்டிய மன்னன் இராசேந்திர சோழனின் மகன் வழி பேரன் அதிராசேந்திர சோழனோடு நிறைவடைகிறது. அடுத்து...